செய்திகள்

மகிந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; கோத்தபாயவே பிரதமர் வேட்பாளர்

மஹிந்த இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை. இன்றைய ஜனாதிபதி மைத்திரியுடனான சந்திப்பில் கோதாபய ராஜபக்சவை சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தவேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுக்கவுள்ளார்.

அமெரிக்க இரட்டை பிராஜாவுரிமையை வேண்டுமானாலும் விட்டுகொடுக்க கோதாபய தயாராக இருக்கிறார். ஆனால் , அவரை அரசியல் பழி வாங்குவதற்காக கைது செய்யகூடாது என்பதன் அடிப்படையிலே மஹிந்த மைதிரியிடம் யணிந்த வேண்டுகோளை விடுக்கவுள்ளதாக கால்டன் வீட்டு வட்டாரம் சமகளத்துக்கு தெரிவித்துள்ளது.

பசில் மற்றும் ஜோன்ஸ்டன் ஆகியோரது கைதுகள் பற்றி கவலை இல்லை. அவர்கள் அரசியல்வாதிகள் என்றவகையில் தண்டனை வழங்க வாய்ப்பில்லை.

ஆனால், கோதாபய அவ்வாறில்லை அவர் கைதுசெய்யப்பட்டால் தண்டனை வழங்க வாய்ப்புள்ளது என சுதந்திரக்கட்சியின் சட்டத்தரணிகள் அறிவுருத்தியுள்ளமையே மகிந்தவின் இந்த முடிவுக்கு காரணமாம்