செய்திகள்

மகிந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதை கட்சியின் நியமன சபையே தீர்மானிக்கும்: நிமால்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கானப் போட்டியிடுவாரென ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதனை கட்சியின் நியமன சபை தீர்மானிக்குமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருக்கிறார்.

இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் திட்டங்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருக்கின்றார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.மு. வின் கீழ் முன்னாள் ஜனாதிபதி போட்டியிடுவாரா எனக் கேட்கப்பட்ட போது நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருப்பதாவது:

“இது அவரைப் பொறுத்த விடயம். அவர் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்து நான் எப்படிப் கூற முடியும் ? தேர்தல் இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பது மற்றொரு விடயம். அத்துடன் வேட்பு மனுக்களும் கோரவில்லை . நியமன சபைகளும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. நியமன சபை நியமிக்கப்பட்டு அவர் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் கீழ் போட்டியிட விரும்புவதாகக் கூறினால் நியமன சபையும் கட்சியும் அது தொடர்பாக தீர்மானிக்கும் .

இந்தக் கட்டத்தில் அது தொடர்பான தீர்மானத்தைத் தெரிவிப்பது முற்றிலும் முன்முதிர்ச்சியற்றதாகும். வருவதற்கு அதிக எண்ணிக்கையான ஆட்கள் இருப்பார்கள். ஜாதிக ஹெல உறுமயகூட எம்முடன் போட்டியிட விரும்பக் கூடும். ஐ.தே.க. உறுப்பினர்கள் சிலர்கூட எமது பக்கத்தில் நின்று போட்டியிட விரும்புவார்கள். அது தொடர்பாக பொருத்தமான தருணத்தில் தீர்மானிக்கப்படும்.