செய்திகள்

மகிந்த – மோடி தொலைபேசியில் உரையாடல்: மீனவர் பிரச்சினை குறித்து முக்கிய கவனம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் தொலைபேசி மூலமாக உரையாடியுள்ளதாக கொழும்பில் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இலங்கை நீதிமன்றம் ஒன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்கள் குறித்தும், இம்மாத இறுதியில் காட்மண்டுவிவில் நடைபெறவிருக்கும் சார்க் உச்சி மாநாடு தொடர்பாகவும் இருவரும் முக்கியமாகப் பேசிக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தடைகள் விதிக்கப்பட்ட மீனவர்கள், இந்திய சிறைகளில் தமது சிறைதண்டனையை  அனுபவிப்பர் எனும் உடன்பாட்டுடன் கைதிகளை பரிமாறிக்கொள்ள ராஜபக்ஷ விரும்பியதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக தலைவர் வைகோ, மரணதண்டணை விதிக்கப்பட்ட மீனவர்களை வைத்து சிறுபிள்ளைத் தனமாக அரசியலில் ஈடுபடுகின்றார் என பாரதிய ஜனதா கட்சி கண்டித்துள்ளது.

மத்திய அரசு இலங்கையில் மரண தண்டனை பெற்ற தமிழ் மீனவர்களை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.