செய்திகள்

மகிந்த – ரணில் சந்திப்பு!

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

பெந்தொட்டை பகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இருவரும் நட்பு ரீதியில் சந்தித்து கலந்துரையாடியதாக ரணில் விக்கிரமசிங்க ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில் அவருடன் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சியை வழநடத்த பொருத்தமான தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே என்று மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அவரின் இருப்பு அரசாங்கத்திற்கு பாதிப்பானது என்றாலும் அவரே எதிர்க்கட்சித் தலைலவருக்கு பொருத்தமானவர் என்று அவர் கூறியுள்ளார். -(3)