செய்திகள்

மகிந்த ராஜபக்சவை அழித்தவர் விமல்வீரவன்ச, ரணில் குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் தோல்விக்கு காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார்
பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் ஆற்றிய முதலாவது உரையின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியை நாசமாக்கியவர் விமல்வீரவன்ச என குற்றம்சாட்டிய ரணில் எதிர்காலத்தில் இனவாதத்தை பரப்பவேண்டாமென விமல்வீரவன்சவை கேட்டுக்கொண்டார்.
அனைவரையும் ஐக்கியப்பட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட அவர்,நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் முழுமையான பிடியின் கீழிருந்த முன்னைய ஆட்சியால் பாராளுமன்றம் முற்றாக புறக்கணிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையின் அதிகாரத்தை குறைப்பதற்கான அரசமைப்பு மாற்றங்களை விரைவில் கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 13 திருத்தத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வொன்று குறித்து உறுதியளித்துள்ள அவர்சுயாதீன குழுக்களை அறிமுகப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.