செய்திகள்

மகிந்த ராஜபக்ச நாட்டை மீண்டும் இன மத அடிப்படையில் பிளவுபடுத்துகின்றார்

மகிந்த ராஜபக்ச நாட்டை மீண்டும் இன மத அடிப்படையில் பிளவுபடுத்துகின்றார்என தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்
டிடபில்யூ இணையத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.  இதன் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது ( சமகளம்செய்தியாளர்).

கேள்வி – ஏன் சிறிசேன பாராளுமன்றத்தை கலைக்க தீர்மானித்தார்?

பதில்-பல்வேறு தரப்பினர் ஜனாதிபதிக்கு கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்தே பாராளுமன்ற கலைப்பு இடம்பெற்றது.இது தவிர அரசியல் ரீதியிலான முட்டுக்கட்டை நிலையும் காணப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு பாராளுமன்ற பெரும்பான்மை இல்லாததால் அதனால் சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியவில்லை.

mr5
ஜனாதிபதியின் சொந்த கட்சிக்குள் பிளவு அதிகமாகி வந்ததும் ஓரு காரணம்,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராகி மீண்டும் அரசியலில் நுழைவதற்கு ஆர்வம் காட்டியதே அதற்கு காரணம். இது வரையில் ஜனாதிபதி இதனை எதிர்த்து வந்துள்ளார்.

கேள்வி- இந்த தேர்தல்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை?

பதில்-இரண்டு மாதங்களிற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட 19 வது திருத்தம் அதிகாரங்களை ஜனாதிபதியிடமிருந்து பாராளுமன்றத்திற்கு கையளித்தது. இதன் காரணமாக தேர்தலில் வெற்றிபெறும் கட்சியும், அதனால் நியமிக்கப்படும் பிரதமருமே நாட்டின் உண்மையான அதிகாரம் படைத்தவர்களாக விளங்குவார்கள்.

கேள்வி- ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தனது விசாரணை அறிக்கையை செப்டம்பரில் வெளியிடவுள்ளது இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் காலம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

பதில்-ஐக்கிய நாடுகள் அறிக்கை முன்னைய அரசாங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளை யுத்தகுற்றவாளிகளாக அறிவிக்கவுள்ளது.இது நாட்டில் தேசியவாத உணர்ச்சிகளை தூண்டிவிடும், அது முன்னாள் ஜனாதிபதிக்கு சாதகமான விதத்தில் காணப்படும், மேலும் இது நாட்டை மீண்டும் இன அடிப்படையில் பிளவுபடுத்தும்.

கேள்வி- நாட்டில் அரசியல்சீர்திருத்தங்களை முன்னெடுப்பதாக தெரிவித்தே சிறிசேன அதிகாரத்திற்கு வந்தார்,ஏன் நாடாளுமன்றத்தில் இதற்கு இவ்வளவு எதிர்ப்பு காணப்படுகின்றது?

பதில்-ஜனாதிபதி நல்லாட்சி தொடர்பான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதாக உறுதியளித்திருந்தார்.ஊழலை ஓளிப்பதாகவும் அவர் உறுதி வழங்கியிருந்தார். சிறிசேனவின் சொந்தக்கட்சியே எதிர்க்கட்சியாக காணப்பட்டது.அக்கட்சியே இரண்டு தசாப்தங்களாக ஆட்சியிலும் இருந்தது. அந்த அரசாங்கத்தை பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.அரசியல் சீர்திருத்தம் மற்றும் நல்லாட்சி போன்றவற்றை அவர்களால் சகித்துக்கொள்ள , ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கேள்வி- ஜனாதிபதியின் கட்சி அல்லது கூட்டணி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றுமா?
பதில்-ஜனாதிபதியின் கட்சி தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது- தற்போதைய ஜனாதிபதிக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில், இவ்வாறான சூழ்நிலையில் ஐக்கியதேசிய கட்சியே அனேகமாக வெற்றிபெறும்.

கேள்வி- தேர்தல் தோல்வி ஜனாதிபதிக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும்?

பதில்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன்,சிறப்பாக இணைந்து செயற்படுகின்றார்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசியகட்சி அரசாங்கம் இணைந்த செயற்பாடு என்பது இலங்கைக்கு சிறப்பான விடயம். எதிர்கால பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும்பான்மை காணப்படலாம்,இதன் காரணமாக அவர்கள் ஜனாதிபதியில் அதிகம் தங்கியிருக்கவேண்டிய நிலை காணப்படாது,இதன் காரணமாக ஜனாதிபதியின் அதிகாரங்களில் வீழ்ச்சிகாணப்படும்.

கேள்வி- எதிர்வரும் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியின் பங்களிப்பு எவ்வாறானதாக காணப்படும்?

பதில்- விடுதலைப்புலிகள் மீண்டும் புத்துயுர் பெருகின்றனர் என்ற அச்சத்தை அவர் உருவாக்குகின்றார்,இன மற்றும் மத அடிப்படையில் அவர் நாட்டை மீண்டும் பிளவுபடுத்துகின்றார்.