செய்திகள்

மகுடம் சூடப்போவது யார்? – பிரான்ஸ்-குரோஷியா இன்று மோதல்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள் மோதவுள்ளன.
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டியை எட்டின.
இதன்படி இன்று இரவு இலங்கை நேரப்படி 8 மணிக்கு அந்த அணிகள் இறுதி போட்டியில் மோதவுள்ளன.
உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. -(3)