செய்திகள்

மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக சுமந்திரன் மற்றொரு முறைப்பாடு

மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் பூபாலசிங்கம் சஞ்ஜீவன் ஆகியோரினாலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் இயங்கி வந்த மகேஸ்வரி நிதியத்தினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிராகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், இது தொடர்பிலான ஆவணங்கள் ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.