செய்திகள்

மக்கலத்தின் அணுகுமுறையை பிரதிபலித்த களத்தடுப்பு வியூகமும், களத்தடுப்பும்.——— இன்றைய போட்டியிலிருந்து

சௌத்தியின் நுணுக்கமான, அற்புதமான பந்து வீச்சு
ஆரம்பத்தில் பந்து சுவிங் ஆகவில்லை, சௌத்தியின் மூன்று பந்துகளை முயின் அலி, பவுண்டரிக்கு விரட்டியிருந்தார், ஆனால் அடுத்த ஓவரின் முதற்பந்தை அற்புதமான பவுன்சராக வீசிய அவர், அடுத்த பந்தை மிகத்துல்லியமான யோர்க்கராக வீசினார், அந்த பந்து சற்று தாமதமாக சுவிங் ஆகி,விக்கெட்டை வீழ்த்தியது.சௌத்தி இன்று வீசிய பந்துகளிலேயே அற்புதமான பந்து அதுதான், அவர் பெல். டெய்லர் ஆகியவர்களின் விக்கெட்களை வீழ்த்துவதற்கு வீசிய பந்துகளும் சாதாரணமாணவையல்ல.

கட்ச்
மோர்கன் வெட்டோரியை லோங்ஓன் திசைக்கு அடித்தார்,எனினும் மிட்விக்கெட்டிலிருந்து பாய்ந்துவந்த மக்கலம்,தன்னை கடந்து சென்ற பந்தை அழகாக தடுத்துநிறுத்தினார்.

இதனால் மோர்கன் மக்கலம் உள்ள திசைக்கு பதிலாக சைட்ஸ்கீரினை நோக்கி அந்த ஒவரின் நான்காவது பந்தை அடித்தார், ஆனால் இம்முறையும் அவர் இன்னொரு பறக்கும் நியுசிலாந்து வீரரை எதிர்ககொள்ள நேர்ந்தது.
அடம் மில்னெ பவுணடரியிலிருந்து ஓடிவந்து சரியாக விழுந்து பந்தை பிடித்தார்.

மக்கலத்தின் களத்தடுப்பு வியூகம்
இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் ஆடுகளத்திற்குள் நுழைந்தவேளை மக்கலம் அமைத்த வியூகம்  டெஸ்ட்போட்டியின் ஆரம்ப ஓவர்களுக்கு அமைக்கப்படுவது போல, அல்லது பவர்பிளேயி;ல் அமைக்கப்படுவது போல காணப்பட்டது. மூன்றுஸ்லிப்ஸ், ஒரு ஹலி,பொயின்ட், சோர்ட்எஸ்டிரா கவர். மோர்கனின் துடுப்பாட்டம் மோசமான நிலையிலுள்ளது என்பது மக்கலத்திற்கு தெரிந்திருந்தது,அதனால் அவரின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே அகற்றுவதற்கு குறிவைத்தார். மக்கலம் பின்பற்றும் வழமைக்குமாறான,ஆவசேமான அணுகுமுறையை அது பிரதிபவித்தது.