செய்திகள்

மக்களின் அதிகமான விருப்பத்தை பெற்றுக்கொண்ட ஒருவரே பிரதமராக தெரிவு செய்யப்பட வேண்டும்

மக்களின் அதிகமான விருப்பத்தை பெற்றுக்கொண்ட ஒருவரே பிரதமராக தெரிவு செய்யப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாராஹேன்பிட்டிய – அபயாராமவில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

களுத்துறை மாவட்ட போக்குவரத்து சபையின் சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சார்ந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதியை அபயாராமவில் சந்தித்தனர்.

அத்துடன் திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும். கடல்சார் கல்லூரியின் பிரதிநிதிகளும் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போதே மகிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.