மக்கள் எதிர்பார்ப்புக்கள் சீர்குலைந்துவிட்டது: தேசிய அரசுக்கு ஜே.வி.பி. கடும் கண்டனம்
அரசாங்கம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகள் சீர் குலைந்துள்ளன. நல்லாட்சிக்கான எதிர்பார்ப்பும் இல்லாமல்போயுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த 26 எம்.பி.க்கள் அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
“சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த 26 எம்.பி.க்கள் அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகள் சீர் குலைந்துள்ளன.
நல்லாட்சிக்கான எதிர்பார்பும் இல்லாமல்போயுள்ளது. இதனை மக்கள் எதிர்பார்க்க வில்லை. நல்லாட்சி என்று கூறிக்கொண்டு பதவிக்கு வந்த அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது மக்களின் எதிர்பார்ப்பை சீர் குலைக்கும் விடயமாகும்” என்றார்.