செய்திகள்

மக்கள் எதிர்ப்பால் இடம்மாறிய மகிந்த ராஜபக்‌ஷவின் பொலநறுவை கூட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளும் சநதிப்பு ஒன்று பொலன்னறுவை இசிபதன ரஜமகா விஹாரையில் சந்திப்பொன்று நடைபெறவிருந்த போதிலும், அதற்கு கிராமவாசிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அந்தக் கூட்டம் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஷான் ரணசிங்கவின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொலன்னறுவைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பொலன்னறுவை பக்கமுன சாரானந்தாராம விஹாரையில் இடம்பெற்ற வழிபாடுகளின் பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி உரையாற்றினார்.

இதன்போது, தாம் விகாரைக்குச் செல்வது தொடர்பில் தொலைக்காட்சியில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகவும் விகாரைக்குள் தம்மை அனுமதிக்க வேண்டாமென கூறுவதாக தகவல் கிடைத்துள்ளதெனவும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஸவின் பங்கேற்புடன் பொலன்னறுவை இசிபதன ரஜமகா விஹாரையில் சந்திப்பொன்று நடைபெறவிருந்த போதிலும், அதற்கு கிராமவாசிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக அந்தக் கூட்டம் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஷான் ரணசிங்கவின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலன்னறுவை பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்திடம் வினவியபோது, கூட்டம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியில் மின்சார விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படவில்லை என அதிகாரி ஒருவர் கூறினார்.