செய்திகள்

மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு அமெரிக்காவுக்கு தப்பியோடி முன்னாள் அமைச்சர் அங்கிருந்தும் தலைமறைவு

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு அமெரிக்காவுக்கு தப்பியோடிய முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், தற்போது அமெரிக்காவிலிருந்தும் தலைமறைவாகி விட்டதாக பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் லலித் திசாநாயக்க மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கேள்விக்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டே பிரதியமைச்சர் பேசினார். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சபையில் இல்லாத நிலையில் அவரின் பெயரை குறிப்பிட முடியாது என்று பிரதி சபாநாயக்கருக்கு சுட்டிக்காட்டியதுடன், ஹன்சாட்டிலிருந்து அவரின் பெயரை நீக்குமாறு கோரினார். இதனையடுத்து பெயர் நீக்கப்பட்டது.