செய்திகள்

மக்கள் பாவனைக்கு உதவாத பெருந்தொகை கருவாடுகள் வத்தளையில் மீட்பு

பண்டிகைக் காலத்தில் சந்தைக்கு விநியோகிக்கவென களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் பாவனைக்கு உதவாத பெருந்தொகை கருவாடுகள் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளினால் கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் வத்தளை பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இரண்டு கொள்கலன்களிலிருந்து 5 டொன் நிறையுடைய கருவாடுகள் மீட்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அதிகாரிகள் குறித்த களஞ்சியசாலையை சுற்றி வளைக்க முன்னர் அங்கிருந்து 45 பெட்டிகளில் கருவாடுகள் கொழும்பில் மொத்த வியாபாரச் சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மூவரை கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.