செய்திகள்

மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்க முயற்சி

வடக்கு மாகாணத்தின் ஏற்கனவேயுள்ள மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இத்தேர்தல் முறைத் திருத்தத்திலும் தக்க வைக்க முடியும். ஆனால் அதனை மாற்றியமைக்க சிலர் முயற்சிக்கின்றனரென தேர்தல் மறுசீரமைப்பு தெரிவுக் குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்த தேர்தல் முறை மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.