செய்திகள்

மக்கள் பிரதிநிதிகளுக்கு இனி பொருட்கள் விநியோகிக்க முடியாது : ஜனாதிபதியால் தடைவிதிப்பு

மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கும் நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட ரீதியில் பொருள்களை விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இனி தடைவிதிக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று பெலநறுவையில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொலநறுவை மாவட்ட அங்கத்தவர்களின் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் , மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தி உரல் , உலக்கை என பலவேறு பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடுகளில் மக்கள் பிரதிநிதிகள் ஈடுபடுகின்றனர். அவ்வாறு தனிப்பட்ட ரீதியில் விநியோகிக்க அவர்களுக்கு உரிமையில்லை.  தமக்கு கிடைக்கும் நிதியை பொது அபிவிருத்தி  நடவடிக்கைகளுக்கே பயன்படுத்த வேண்டும்