செய்திகள்
”மக்கள் வங்கி தொடர்பான செய்திகளில் உண்மையில்லை”
தமது வங்கியினால் பராமரிக்கப்படும் அரச நிறுவனங்களின் கணக்குகளை மீளப்பெறுவதாக எந்தவொரு அரச நிறுவனமும் இதுவரை தமக்கு அறிவிக்கவில்லை என மக்கள் வங்கி இன்று அறிவித்தது.
மக்கள் வங்கியிலுள்ள கணக்குகளை மீளப்பெறுவதற்கு, அரச நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய பத்திரிகைகளில் இன்று வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வங்கி அறிக்கையொன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளது.
இந்த செய்தி தவறானது என மக்கள் வங்கி குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
-(3)