செய்திகள்

மட்டக்களப்பில் அபூர்வ சிறுத்தை விபத்தில் பலி

தினமும் நாட்டில் ஏற்படும் விபத்துகளினால் மனித உயிர்கள் பலியாவது தொடர்பில் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் இதற்கு மாறாக அரிய வகை உயிரினம் ஒன்று விபத்தில் பலியான சம்பவம் ஒன்று இன்று காலை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் இன்று காலை சிறுத்தை குட்டியொன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

இலங்கையில் மிகவும் அருகிவரும் இனமாக சிறுத்தை அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுத்தையினை காண்பதே அபூர்வமாக கருதப்படுகின்றது. மட்டக்களப்பு –கொழும்பு பிரதான வீதியில் சத்துருக்கொண்டானில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்த சிறுத்தையினை பெருமளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இத்தகைய அரிய மிருகங்களை பாதுகாப்பதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

IMG_0082 IMG_0088