மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் படங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் உள்ள விளாவட்டவான் கிராமத்தில் முள்ளியவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று பிற்பகல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு இராணுவப்புலனாய்வுத்துறையினர் மக்களை அச்சுறுத்தி செல்லவிடாத நிலையிலும் விளாவட்டவான் மாரியம்மன் ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் க.கோபாலபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம்,கிருஸ்ணபிள்ளை மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுரைகளும் நடைபெற்றன.