மட்டக்களப்பில் உள்ள மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான பால்நிலை சமத்துவம் தொடர்பிலான ஒரு நாள் செயலமர்வு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான பால்நிலை சமத்துவம் தொடர்பிலான ஒரு நாள் செயலமர்வு இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் அனுசரணையுடன் தேவைநாடும் மகளிர் அமைப்பு இந்த செயலமர்வினை நடத்தியது.
தேவைநாடும் மகளிர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி சங்கீதா தர்மரஞ்சன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகளுக்கான நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் வி.சபரிநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் தேவைநாடும் மகளிர் அமைப்பின் சட்டத்தரணி அருள்வாணி சுதர்சன், உளவள துணையாளர் ஜெயதீபா பத்மஸ்ரீ ஆகியோர் இதன்போது கருத்துரைகளை வழங்கினர்.
சமூகத்தில் ஏற்படும் பால் நிலை தொடர்பான வன்முறைகளை தடுத்தல்,அது தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தல்,மத்தியஸ்த சபைக்கு வரும் பால்நிலை தொடர்பான பிரச்சினைகளை கையாளும் போது ஏற்படும் சிக்கல்நிலைகளை தீர்த்துக்கொள்ளுதல் தொடர்பிலான பயிற்சியும் இதன்போது வழங்கப்பட்டன.
இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மத்தியஸ்தசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நீதிமன்றுக்கு செலும் பல சமூகம் சார்ந்த வழக்குகளை தீர்க்கும் வகையில் மத்தியஸ்தசபை செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.