செய்திகள்

மட்டக்களப்பில் ஒருவர் சுட்டுக்கொலை: மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கைவரிசை

மட்டக்களப்பு, மண்பூர் பகுதியில் வீட்டிலிருந்த ஒருவரை மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தரான சச்சிதானந்தம் மதிதேவன் (வயது – 46) என்பவரே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த நபரின் வீட்டுக்குச் சென்று அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றனர். உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருகின்றனர் என மண்டூர் பொலிஸார் தெரிவித்தனர்.