செய்திகள்

மட்டக்களப்பில் கூட்டமைப்பின் பிரச்சாரம் ஆரம்பம்: யாழ்ப்பாணத்தில் இன்று முதல்

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு திரட்டும் வகையிலான பிரச்சாரங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வியாழக்கிழமை ஆரம்பித்திருக்கின்றது.  இதில் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், கோ.கருணாகரம், பிரசன்னா, வெள்ளிமலை, நடராசா மற்றும் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இக்குழுவினர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப்பிரசுரங்களை விநியோகத்தனர்.

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பிரச்சாரங்கள் இன்று  ஆரம்பமாகும். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. இதனையடுத்தே கூட்டமைப்பின் பிரச்சாரங்கள் ஆரம்பமாகியுள்ளன.

ம யாழ்ப்பாணத்திலும், வடக்கின் ஏனைய பகுதிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியாக பிரச்சாரங்களை ஆரம்பிக்கும் என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

IMG_6450 IMG_6442 IMG_6418 IMG_6392 IMG_6388 IMG_6381 IMG_6379