செய்திகள்

மட்டக்களப்பில் சுகாதாரச் சீர்கேட்டுக்கு ரூபா 6000 தண்டப்பணம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளுடன் நடத்தப்பட்ட உணவகங்கள் மற்றும் மரக்கறி விற்பனையாளர்கள் மூவருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தலா ஆராயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புறநகர்ப்பகுதிகளில் உள்ள சந்தை மற்றும் வெதுப்பகங்களில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத உணவுப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் தரம் குறைந்த மரக்கறிகளை விற்பனைசெய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருதயபுரம் மற்றும் வெட்டுக்காடு பகுதிகளில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ள சோதனை நடவடிக்கையின்போது இரண்டு வெதுப்பகங்கள் மற்றும் மரக்கறி விற்பனையாளர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

இவர்களில் வெதுப்பக உரிமையாளர்கள் இருவர் மற்றும் மரக்கறி விற்பனையாளருக்கு தலா ஆறாயிரம் ரூபாவை தண்டப்பணமாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா வித்தித்ததுடன் கடும் எச்சரி;க்கையும் செய்து விடுவித்ததாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இருதயபுரம் பொதுச்சுகாதார பரிசோதகர் கே.ஜேசுராஜா,வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் சோ.அமுதமாலன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழு இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டது.

குறித்த பகுதிகளில் உள்ள வெதுப்பகங்கள் மற்றும் சந்தைகளில் சுகாதாரத்தினை பேணுவது தொடர்பில் தீடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC_7478

DSC_7460

DSC_7499

DSC_7480

DSC_7490