செய்திகள்

மட்டக்களப்பில் சுகாதாரம் பேண தவறுபவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை

மட்டக்களப்பு நகரில் உணவு விடுதிகளில் சுகாதாரம் பேணப்படாவிட்டால் அவற்றுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு, வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் சோ.அமுதமாலன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரின் வெட்டுக்காடு பொதுச்சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள உணவு விடுதிகள் நேற்று திடீர்ச்சோதனைக்குட்படுத்தப்பட்டது.
பொதுமக்கள் வழங்கிய தகவல்கள் அடிப்படையில் வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் சோ.அமுதமாலன் தலைமையில் சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்குழுவும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் சுற்றாடல் பிரிவும் இணைந்து இந்த சோதனையினை மேற்கொண்டது.
மட்டக்களப்பு நகரில் கோட்டமுனைப்பாலத்துக்கு அருகில் உள்ள உணவு விடுதியில் இருந்து சுகாதாரத்துக்கு உதவாததும் சுகாதாரத்துக்கு உகந்த முறையில் இல்லாமல் வைக்கப்பட்டிருந்ததுமான பெருமளவு உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் சோ.அமுதமாலன் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த உணவு விடுதியில் பணியாளர்களாக பணியாற்றிவருகின்றவர்களில் ஐந்து பேர் மருத்துவ சான்றிதழில் இல்லாமல் கடமையாற்றிவருவதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் உள்ள உணவு விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள்,விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுவருகின்ற நிலையில் சிலர் அவற்றினை கருத்தில்கொள்ளாமல் செயற்பட்டுவருகின்றனர்.
பொதுமக்கள் சுகாதாரத்துக்கு தீங்கில்லாதவகையில் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் நாங்கள் அவதானிப்புடன் செயற்பட்டுவருவோம்.எதிர்காலத்தில் உணவுவிடுதிகளில் சுகாதாரம் உரிய முறையில் பேணப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பு வெட்டுக்காடு பொதுச்சுகாதார பிரிவுக்குட்பட்ட ரொசேரோ வீதியில் குப்பைகளைக் கொட்டிய மூன்று பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் சோ.அமுதமாலன் தெரிவித்தார்.
வீதியில் குப்பைகள் கொட்டப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு காணப்பட்ட குப்பைகளைக்கொண்டு குப்பை கொட்டியவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
[image_slider]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6935.jpg” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6935.jpg”] மட்டக்களப்பு உணவு விடுதிகள் திடீர்ச்சோதனை [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6940.jpg” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6940.jpg”] மட்டக்களப்பு உணவு விடுதிகள் திடீர்ச்சோதனை [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6947.jpg” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6947.jpg”] மட்டக்களப்பு உணவு விடுதிகள் திடீர்ச்சோதனை [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6949.jpg” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6949.jpg”] மட்டக்களப்பு உணவு விடுதிகள் திடீர்ச்சோதனை [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6959.jpg” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6959.jpg”] மட்டக்களப்பு உணவு விடுதிகள் திடீர்ச்சோதனை [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6974.jpg” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6974.jpg”] மட்டக்களப்பு உணவு விடுதிகள் திடீர்ச்சோதனை [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6975.jpg” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6975.jpg”] மட்டக்களப்பு உணவு விடுதிகள் திடீர்ச்சோதனை [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6984.jpg” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6984.jpg”] மட்டக்களப்பு உணவு விடுதிகள் திடீர்ச்சோதனை [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6991.jpg” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6991.jpg”] மட்டக்களப்பு உணவு விடுதிகள் திடீர்ச்சோதனை [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6993.jpg” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6993.jpg”] மட்டக்களப்பு உணவு விடுதிகள் திடீர்ச்சோதனை [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6995.jpg” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6995.jpg”] மட்டக்களப்பு உணவு விடுதிகள் திடீர்ச்சோதனை [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6997.jpg” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/DSC-6997.jpg”] மட்டக்களப்பு உணவு விடுதிகள் திடீர்ச்சோதனை [/image_items]
[/image_slider]