செய்திகள்

மட்டக்களப்பில் செவிப்புலன் வலுவற்றோர் வருமான அதிகரிப்பிற்காக இஞ்சி செய்கை பயிற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள செவிப்புலன் அற்றோரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவகமும் சமூக வர்த்தக தொழில்நுட்ப அபிவிருத்தி அமைப்பும் இணைந்து செவிப்புலனற்றோரை இஞ்சி செய்கையில் ஈடுபடுத்தும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி செய்கை வெற்றியளித்துள்ள நிலையில் அதிக வருமானம் ஈட்டும் துறையாகவும் விளங்கிவருகின்றது.

இதன்காரணமாக இத்துறையில் செவிப்புலனற்றோரையும் உள்ளீர்த்து அவர்களின் வருமானத்தினை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான ஓரு நாள் பயிற்சியும் இஞ்சி விதைகள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவகத்தில் அதன் போசகர் பிரதீபன் சனா தலைமையில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் சமூக வர்த்தக தொழில்நுட்ப அபிவிருத்தி அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஆர்.ஐ.பிரபாகரன் உட்பட அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி,வாழைச்சேனை,ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த செவிப்புலன் வலுவற்றோர் இதற்காக தெரிவுசெய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் செவிப்புலன் வலுவற்றோர் 173பேர் உள்ளதாகவும் அவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரே இந்த பயிற்சிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவகத்தில் அதன் போசகர் பிரதீபன் சனா தெரிவித்தார்.

IMG_0033 IMG_0045 IMG_0054