செய்திகள்

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியை சீர்குலைக்க முயலும் சக்திகள் தொடர்பில் விழிப்பாக இருங்கள்

களுவாஞ்சிகுடி சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் தமிழ் தேசிய அரசியலும் எதிர்கால பட்டிருப்பு தொகுதியின் அரசியல் பிரதிநிதுத்துவமும் எனும் எண்ணக்கருவில் மாபெரும் மக்கள் களுவாஞ்சிகுடி சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் தமிழ் தேசிய அரசியலும் எதிர்கால பட்டிருப்பு தொகுதியின் அரசியல் பிரதிநிதுத்துவமும் எனும் எண்ணக்கருவில் மாபெரும் மக்கள் சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை மாலை களுவாஞ்சிகுடி அபிவிருத்தி சங்க தலைவரும் நகரத் தலைவருமான அ.கந்தவேள் தலைமையில் மிக சிறப்பான முறையில் இடம்பெற்றது.

பட்டிருப்பு தொகுதியின் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு.விஜயரெட்ணம் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற நிகழ்வில் முதலில் தமிழரசுக்கட்சியினை வழிநடத்திய மறைந்த தலைவர் சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களின் உருவப்படத்திற்குமலர்மாலை அணிவிக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பட்டிருப்பு தொகுதியினைப் பிரதிநித்துவப்படுத்தும் பல சமூக அமைப்புகளும் புத்திஜீவிகளும் ஏராளமான மக்களும் கலந்து கொண்டனர் இதன் போது பட்டிருப்பு தொகுதியின் தலைநகராக விளங்கும் களுவாஞ்சிகுடி நகரிலிருந்து தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் பெரும்பாடுபட்டு அதிக தடவை தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்து தமிழரசுக்கட்சியினை வழிநடத்திய மறைந்த தலைவர் சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களினை தொடர்ந்து களுவாஞ்சி மண்ணுக்கும் மட்டு நகருக்கும் சிறந்த கல்வி அறிவு படைத்த மக்கள் செல்வாக்குடைய புதிய பிரதிநிதிகளை உருவாக்கும் நோக்கில் மக்களுடைய அனைவரினதும் கருத்துக்கேற்ப சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களின் பாசறையில் வளர்ந்த சட்டத்தரணியும் சமூகசேவையாளருமான பாடுமீன் சு.சிறீகந்தராஜா அவர்களினை இம் முறை மட்டு மண்ணிலிருந்து தமிழரசுக்காட்சி சார்பில் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கான கோரிக்கையினை பட்டிருப்பு தொகுதியினைப் பிரதிநிதுவப்படுத்தி கலந்து கொண்ட அனைவரும் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.

அவர் இங்கு வாழ்ந்த காலத்தில் தமிழுக்கும்இ தமிழ் மக்களுக்கும் ஆற்றிய பணிகளைச் சிலர் நினைவுகூர்ந்து எடுத்துரைத்தனர். புலம்பெயர்ந்து சென்றபின்னரும் அவர் தான் புலம்பெயர்ந்த நாட்டிலும்இ தமிழ் மொழிக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் ஆற்றுகின்ற பணிகளையும் அவர் வகித்த சமூக அமைப்புக்களின் பதவிகளையும் பற்றிக் கூறினர்.

தனது 17 ஆவது வயதில் இருந்தே தமிழரசுக்கட்சியியில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுஇ 1970இலிருந்து 77 பொதுத் தேர்தல்களில் பிரச்சாரங்களில் மும்முரமாகச் செயல் பட்டதுடன் இன்றுவரை தமிழரசுக்கட்சி ஆதரவாளராகவே உள்ள திரு. சு.சிறீகந்தராசாவே நமது பகுதியின் அரசியல் பிரதிநிதியாவதற்கு மிகவும் பொருத்தமானவர் என எண்ணியே அவருக்குத் தாம் அழைப்பு விடுத்ததாகஇ அபிவிருத்திச் சங்கத்தலைவர் திரு அ.கந்தவேள் தமது உரையில் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் கிளைத் தலைவரும்இ களுவாஞ்சிகுடி வர்த்தகர் சங்கத் தலைவருமான திரு. சு.விஜயரெத்தினம் அவர்கள் தனது உரையில் திரு சிறீகந்தராசா வைத் தான் சிறுபிராயத்திலிருந்தே அறிந்தவன் என்பதையும்இ இளமையில் இருந்தே அவர் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிகான பணிகளில் ஈடுபட்டவர் என்பதயும்இ எப்போதும் அவர் அந்த உணர்வுடனேயே வாழ்ந்து வருபவர் என்பதையும் கூறி இந்தப் பதவிக்கு அவர் மிகவும் பொருத்தமானவர் என எடுத்துரைத்தார். இந் நிகழ்வில் கலந்து கொண்ட வைத்தியட்சகர் னுச.கு.சுகுணன் கருத்து தெரிவிக்கையில் நாம் இன்று சிறப்பான ஒரு தருணத்தில் அனைவரும் குழுமியிருக்கிறோம் இன்றய நாள் மிக மகிழ்ச்சியான நாள் நாம் இன்று சிறந்த பாதையிலே பயணிக்க வேண்டுமென முடிவெடுத்திருக்கிறோம் நாம் எவ்வாறு எப்பாதையில் பயணிக்க வேண்டும் என அண்ணன் சிறிகந்தராசா அவர்கள் அறிந்திருக்கிறார் எனவும் கிழக்கிலே சிறந்த கல்வி அறிவு படைத்த புத்திஜீவிகள் சட்டவல்லுணர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படவேண்டும் எனக் கருத்து தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சட்டத்தரணி சு.சிறீகந்தராஜா அவர்களை பொதுத் தேர்தலில் களமிறக்க வேண்டும் என்பது தொடர்பான மக்களுடைய கருத்துகளடங்கிய அறிக்கையினை தமிழரசுக்கட்சியின் செயலாளருக்கு அனுப்பி வைப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து உரையாற்றிய சமூக சேவையாளரும் சட்டத்தரணியுமான சிறீகந்தராஜா இ தான் கடந்த 23 வருடங்களாக வெளிநாட்டில் வாழ்ந்திருந்தும்கூடஇ தனது பிரதேச மக்கள் இன்னமும் தனது இளமைக்காலப் பணிகளைக் கருத்தில் கொண்டு தன்னை இத்தகையதொரு பொறுப்பினை ஏற்குமாறு அழைத்தமைக்குத் தான் முதலில் தலை வணங்குவதாகத் தெரிவித்தார்.

தான் இம் மண்ணை விட் டுப் புலம் பெயர்ந்து சென்றாலும்இ “புலன் பெயர்ந்து” செல்லவில்லை என்பதையும்இ எப்போதும் தன் உள்ளமும்இ உணர்வுகளும் இந்த மண்ணிலேயே அமிழ்ந்து கிடக்கிறது என்பதையும் உங்கள் அனைவரிடமும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” எனக் கூறினார். ததொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்இ நான் பிறக்கும் போதும் தமிழரசுக்கட்சிதான்இ வளரும்போதும் தமிழரசுக்கட்சிதான்இ வாழும்போதும் தமிழரசுக்கட்சிதான்இ இறக்கும்போதும் தமிழரசுக்கட்சிதான் எனக் கூறி தமிழை வணங்கி தனது கருத்தினை நிறைவு செய்தார். தொடர்ந்து பட்டிருப்பு தொகுதியினை பிரதிநிதுத்துவப்படுத்தும் பல அமைப்புகள் தங்களுடைய ஆதரவினை வெளிப்படுத்தின. தொடர்ந்தும் மக்களுடைய கருத்துக்கள் மற்றும் புத்திஜீவிகளினுடைய அறிவுரைகள் இடம்பெற்று நிகழ்வு சிறப்புற நிறைவு பெற்றது.

இந் நிகழ்வு தொடர்பாக அரசியல் காழ்புணர்ச்சி கொண்டவர்கள் தங்கள் சுயநலனுக்காக தங்களுக்கு நெருங்கிய இணையத்தளங்ளில் இந் நிழ்வுக்கு எதிரான கருத்துக்களையும்இ அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படாததும்இ பொருதமற்றதுமான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளமையானது எதிர்காலத்தில் சிறந்த கல்வி அறிவுடைய சமூக சேவை உள்ளங் கொண்டவர்களையும் புத்திஜீவிகளையும் அரசியல் பிரதிநிதிகளாக எம் மக்களுடைய பிரதிநிததிகளாக புதியவர்களை கொண்டு செல்வதில் பெரும்தடையாக அமையும் என்பதில் ஐயமில்லை. கூட்டத்தில் கேட்கப்பட்ட இரண்டு மூன்று கேள்விகளுக்கு திரு சிறீகந்தராசா அவர்கள் சிரித்த முகத்தோடும்இ மிகவும் பொறுப்புணர்வோடும் பதிலளித்தார். எல்லோரும் அவரது பதில்களில் திருப்தியடைந்து பாராட்டினார்கள். ஆனால் குறித்த செய்தியில் வேறுவிதமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதும் அவ்வாறான செய்திகளை வெளியிட்டமை தொடர்பில் இப்பகுதி மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் நாம் சு.சிறீகந்தராஜாவிடம் வினவியபோது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதையும்இ அது எவ்வளவு ஒழுங்காகவும்இ மகிழ்வாகவும்இ நாகரிகமாகவும் உயர்ந்த தரத்திலும் நடைபெற்றது என்பதையும் அங்கு வந்திருந்த அனைவரும் அறிவார்கள். காழ்ப்பு உணர்ச்சியில்இ கற்பனையாக எழுதப்பட்டுள்ள செய்தியின் காரணகர்த்தாக்களுக்குக் காலம் பதில் சொல்லும். எனக்கு ஒன்றே ஒன்றுதான் கவலை. சமூகத்தை முன்னேற்றப்பாதையில் வழிநடத்த வேண்டியவர்களே இப்படியான செயல்களில் ஈடுபட்டால் சமூகம் எப்படி முன்னேறும்? எனக் கேட்டார்.