செய்திகள்

மட்டக்களப்பில் நீரில் மூழ்கி குழந்தை பலி

பெற்றோரின் கவனயீனம் காரணமாக இரண்டு வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் சனிக்கிழமை பிற்பகல் இரண்டு வயது குழந்தையொன்று வாய்க்காலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

நேற்று பிற்பகல் 4.30மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஏறாவூர்,ஐயங்கேணியை சேர்ந்த கிருஸ்ணகுமார் செமிட்ட என்னும் இரண்டு வயதும் நான்கு மாதங்களையும் உடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

ஐயன்கேணியில் இருந்து தனது தாயாருடன் பாவற்கொடிச்சேனைக்கு வந்து சில மணி நேரங்களிலேயே இந்த துயரச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

வாய்க்காலுக்கு அருகில் குறித்த குழந்தையின் வீடு இருந்ததாகவும் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை குறித்த வாய்க்காலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

இதன்போது சடலம் தாண்டியடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

பெற்றோரின் கவனயீனமே குறித்த குழந்தை உயிரிழந்ததற்கு காரணம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர்.

IMG_0021