செய்திகள்

மட்டக்களப்பில் மின்சாரசபை ஊழியர் மின் தாக்கி ஆபத்தான நிலையில்

மட்டக்களப்பு நகரில் இன்று காலை மின்சார திருத்தவேலைகளில் ஈடுபட்டிருந்த மின்சாரசபை ஊழியர் ஒருவர் மின்தாக்கத்திற்குள்ளாகி ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகரின் தாண்டவன்வெளி பகுதியில் திருத்தவேலையில் ஈடுபட்டிருந்த திருகோணமலை மின்சாரசபை தலைமையக ஊழியரே இவ்வாறு மின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளார்.

திருகோணமலையை சேர்ந்த கே.வசந்தன்(35வயது)என்பவரே இவ்வாறு மின் தாக்கதிற்குள்ளான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்தலத்துக்கு சென்ற மட்டக்களப்பு மின்சாரசபையின் அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

 DSC_2117 DSC_2122