செய்திகள்

மட்டக்களப்பில் யானைகளின் தாக்குதலில் மேலும் ஒருவர் பலி

இவர் மண்டூரில் இருந்து மாடுகளை கொண்டுசென்று இப்பகுதியில் மேய்ச்சல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று இரவு சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,சடலத்தினை பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

நேற்று அதிகாலையும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குழுவினமடு பகுதியிலும் யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒருவாரத்தில் நான்கு பேர் யானையின் தாக்குதல்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.