செய்திகள்

மட்டக்களப்பில் விபத்தில் கர்ப்பிணி கோமாதா பலி

சித்திரைப்புத்தாண்டு தினமான இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஒரு விபத்தில் தாயும் தாயின் வயிற்றில் இருந்த குழந்தையும் பலியான சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் தாய்மையடைந்த பசுவொன்று உயிரிழந்துள்ளமை பெரும் கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.
வேகமாக வந்த பிக்கப் வாகனம் வீதியின் அலைந்து திரிந்த குறித்த பசுவின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது பசு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் இது தொடர்பில் குறித்த பிக்கப் வாகனத்தினை தடுத்துவைத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கோமாதாவாக தமிழர்களினால் போற்றப்படும் பசுவானது தமிழர்களின் சித்திரைப்புத்தாண்டில் உயிரிழந்துள்ளமை இந்து மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

IMG_0036