செய்திகள்

மட்டக்களப்பில் விபத்து! கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு காயம்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி, உப்போடையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமார் காயமடைந்துள்ளார்.

கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வான் ஒன்றை முந்தி செல்ல முயன்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது கோட்டக்கல்வி பணிப்பாளர் சிறு காயங்களுக்கு உள்ளானதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.