செய்திகள்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் காயம்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் டிப்பர் மற்றும் முச்சக்கர வண்டி மோதிக்கொண்டதில் முச்சக்கர வண்டியில் வந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை 8.00மணியளவில் மட்டக்களப்பு திருமலை வீதியில் சத்துக்கொண்டான் பொலிஸ் காவலரணுக்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த பெண் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியை மோதிய டிப்பர் வாகனம் நிறுத்தாமல் சென்றுவிட்டதாகவும் இது தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 1429757416798