செய்திகள்

மட்டக்களப்பு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 3.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார தெரிவித்தார்.

கைதி தப்பியோடியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பிலிருந்து புலனாய்வு ஆணையாளர் ஒருவரும், உதவி அத்தியட்சகர் ஒருவரும் மட்டக்களப்பு நோக்கி சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.

கைதி தப்பியோடியமையுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் எவரேனும் தொடர்புபட்டுள்ளமை உறுதிசெய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவரை விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தப்பியோடிய கைதியை மீண்டும் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.