செய்திகள்

மட்டக்களப்பு நகரில் நாளை முதல் இயங்கவுள்ள சர்வதேச தரத்திலான அதி நவீன உடற்பயிற்சி நிலையம் (படங்கள்)

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக சகல வசதிகளும் கொண்ட சர்வதேச தரத்திலான அதி நவீன உபகரணங்களுடன் கூடிய புதிய உடற்பயிற்சி நிலையம் மட்டக்களப்பு நகரில் திறந்து வைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இலங்கை சோட்டாக்கன் கராத்தே கழகத்தினால் இந்த உடற்பயிற்சி நிலையமானது இல 01, புதிய கல்முனை வீதி, மட்டக்களப்பு (திறந்த பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில்) எனும் முகவரியில் ஏப்ரல் 04ஆம் திகதி நாளை சனிக்கிழமை பி.ப 5.30 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

உடற்கட்டுமான மற்றும் உடற்பயிற்சி தொடர்பான தகைமை,துறைசார் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு பல்வேறு உடற்கட்டுமான தேவைகளின் பால் ஆர்வமுள்ள ஆண் பெண் இருபாலருக்குமான உடற் பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன.

பெண்களுக்கான பெண் பயிற்றுனர்களும், தனியான பாதுகாப்புடன் கூடிய சௌகரியமான நேர ஒதுக்கீட்டுடன் பயிற்சிகள் வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி பயிற்சிகளின் மூலம் ஈட்டப்படும் வருமான நிதியானது கழக விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட இருப்பதால், உடல் கட்டுமான – உடலாரோக்கியம் தொடர்பான அக்கறை கொண்ட அனைவரையும் மேற்படி பயிற்சிகளில் இணைந்து கொள்வதன் மூலம் கழக வீரர்களின் விளையாட்டுத்துறைசார் மேம்பாட்டிற்கு பங்களிப்புச் செய்யுமாறு சோட்டக்கன் கராத்தே கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

gym batticalo (1)

gym batticalo (2)

gym batticalo (3)

gym batticalo (4)

gym batticalo (5)