செய்திகள்

மட்டக்களப்பு நகரில் 3 தினங்கள் மின்வெட்டு

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெறவிருப்பதால் மட்டக்களப்பு மாவட்டடத்தில் 3 தினங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின்பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

2015.05.07 வியாழக்கிழமை 9.00 – 17.00 கோவிந்தன் வீதி, லேக் வீதி 2, மத்திய வீதி, வைத்தியசாலை வீதி, சூர்யா ஒழுங்கை, மேல்மாடி வீதி,

2015.05.08 வெள்ளிக்கிழமை 9.00 – 17.00 பெரிய நீலாவணை, களுவாஞ்சிகுடி, கல்லாறு, ஓந்தாசிமடம்,

2015.05.09 சனிக்கிழமை 8.30 – 17.00 லொயிட்ஸ் அவெனியு, திருமலை வீதிஆகிய இடங்களில் மின்வெட்டு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.