செய்திகள்

மட்டக்களப்பு பெரியகல்லாறில் மதி வெடி மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து மதி வெடியொன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை (21)காலை மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இதனைக் கண்ணுற்று வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த மிதிவெடி மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மிதிவெடி அவ்விடத்தில்கொண்டுவரப்பட்டு போடப்பட்டுள்ளதாக தெரிவித்த களுவாஞ்சிகுடி பொலிஸார் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

photo 4 photo 5