செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 1222 திட்டங்களுக்காக 7451 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1222 திட்டங்களுக்காக 7451 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சருமான எம்.எஸ்.எம்.அமீரலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களான சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சருமான எம்.எஸ்.எம்.அமீரலி,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாசீர் நசீர் அகமட் தலைமையில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் இந்த ஆண்;டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை ஆராயும் வகையில் இந்த அபிவிருத்திக்குழுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த திட்டத்தின் கீழ் விசேட நிதியின் கீழ் 3524 மில்லியன் ரூபாவும் கிழக்கு மாகாணசபையினால் 657 மில்லியன் ரூபாவும் அமைச்சுகளினால் 1895 மில்லியன் ரூபாவும் அரசசார்பற்று நிறுவனங்கள் ஊடாக 688மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

அத்துடன் மாவட்டத்தில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் பூர்த்தியடையாத வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

IMG_0008 IMG_0012 IMG_0013