செய்திகள்

மட்டக்களப்பு விவேகானந்தாவில் சரஸ்வதி சிலை

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சரஸ்வதி சிலை ஞாயிற்றுக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மற்றும் பாடசாலை நலன்விரும்பிகளின் பங்களிப்புடன் இந்த சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அவுஸ்ரேலிய தமிழ் பொறியியளார்கள் சங்கத்தினால் வழங்கப்பட்ட போட்டோ பிரதி இயந்திரமும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

IMG_0014 IMG_0017 IMG_0062

N5