மட்டு இந்துவில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு
மட்டக்களப்பு இந்து கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை இன்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் திறந்து வைத்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான சி.யோகேஸ்வரன், பொன் செல்வராசா, கிழக்கு மாகாண அமைச்சர்களான தண்டாயுதபானி, துரைராஜசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதிதிகள் அழைத்து வரப்படுவதையும் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை நாடாவை வெட்டி அதிதிகள் திறந்;து வைப்பதையும் ஒரு தொகுதி புத்தகத்தை அமைச்சர் பாடசாலை அதிபரிடம் கையளிப்பதையும் படங்களில் காணலாம்.