செய்திகள்

மட்டு இளைஞர் பேரவையின் தலைமைத்துவ பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இருநாள் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் உயர்தரம் கல்வி பயிலும் இந்து மாணவர்கள் மற்றும் இந்து இளைஞர்கள்,அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ இருநாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு மாமாங்கம் விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபை மண்டபத்தில் சனிக்கிழமை காலை தொடக்கம் நடைபெற்றுவந்தது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி பி.எழில்வாணி,மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் அமிர்தலிங்கம் அதன் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.
சமூகத்தில் இளம் சமூதாயம் மத்தியில் ஆன்மீக ரீதியான சிந்தனையினை ஏற்படுத்தி அதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தினை கட்டியெழுப்பும் வகையில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

IMG_0157 IMG_0161 IMG_0175 IMG_0180 IMG_0192 IMG_0206 IMG_0222