செய்திகள்

மணிரத்னம் இயக்கும் ஓ காதல் கண்மணி படத்தின் இசை வெளியீடு

கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் புதிய படமான ஓ காதல் கண்மணி படத்தினை  இயக்கி வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், ஹீரோயினாக நித்யா மேனனும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா,ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

‘அலைபாயுதே’ பாணியிலான ரொமான்டிக் படமாக இப்படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இசையை ஏப்ரல் மாதம் 4ம் தேதி வெளியிடவுள்ளனர். இதற்கான அறிவிப்பை வித்தியாசமான முறையில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஏப்ரம் 14ம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.