செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு !

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 6 மாவட்டங்களில் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கண்டி, காலி, களுத்துறை, மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

மண்மேடுகள் சரிந்து வீழ்வதற்கும், மண்சரிவுகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான வாநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய மலையகப் பகுதிகளில் அதிகூடிய மழை வீழ்ச்சி 150 மில்லிமீற்றர்வரை அதிகரிக்கும் என்றும் வெள்ளப்பெருக்குத் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.