செய்திகள்

மண்டூர் கோட்டமுனை இந்து சமய மறுமலர்ச்சி மன்றத்திற்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

கிழக்கிலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபையினால் மண்டூர் கோட்டமுனையில் அமைந்துள்ள இந்துசமய மறுமலர்ச்சி மன்றத்திறத்திற்கு இசைக்கருவிகள், இந்துமத நன்நெறிக் கோகையான பகவத்கீதை, வாழ்வாதார உதவி, உலர் உணவுப்பொதி, மாணவர்களுக்கான கற்றல் புத்தகங்கள், வலது குறைந்த மாணவர்களுக்கான கற்றல் முயற்சிக்கான உதவி, கற்றுமுடித்து விட்டு வீட்டிலிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாழிகாட்டல் செயற்பாடுகள், என்பன இன்று ஞாயிற்றுக் கிழமை (24) வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கிலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபையின் தலைலவர் த.துஷ்யந்தன் தலைமையில், மண்டூர் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெல்லாவெளி பொதுச் சுகாதார பரிசோதகர் வே.குணராசசேகரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீர்வரர் ஆலய பிரதம குருவும், கிழக்கிலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபையின் ஆலோசகருமான, சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள், மண்டூர் ஆலயங்களின் குருமார்கள், மற்றும், அகில இலங்கை சத்திய சாயி சேவா அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் வி.ஆர்.பிரேமதாசா, மண்டூர் இரமக விருஷ்னமிஷன் மன்றத் தலைவர் கு.ஜதீஸன், ஓய்வு பெற்ற விவசாயப் போதனாசிரியர் பொ.பரமானந்தராசா, போரதீவுப் பற்று பிரதேச கலாசசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி.ம.பத்மகௌரி, இந்து சமய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.உதயமலர், பொருளாதார அபிருவத்த்தி உத்தியோகஸ்ர், உட்பட கிராம பொதுமக்கள், பாடசாலை மாணரவகள், இந்து இளைஞர் மன்றத்தினர் என பலரும் காலந்து கொண்டனர்.

இந்து மதத்தின் பாரம்பரியங்கள் பற்றியும், எமது இந்து மதத்தின் ஆரம்ப வழிபாடுகளில், பஜனை வழிபாடுகள் ஆரம்ப நிகழ்வாகவே அமைந்துள்ளன. எனவே இவ்வாறான பஜனை நிகழ்வுகளுக்கு, இசைக்கருவிகள் வழங்கி, ஊக்குவிப்பதானது மிகவும் வரவேற்கத்தக்க செயற்பாடாகும் என கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் ஆலோசகர் மு.கு.சச்சிதானந்தக் குருக்குள் இதன்போது தெரிவித்தார்.

இந்து இளைஞர மன்றங்கள் வெறுமனே பஜனை மன்றங்களாக இல்லாமல் கிராமங்களில், கலை கலாசார மற்றும், ஆய்வு நிலையங்களாக மிளிரும் பட்சத்தில் பல்லாண்டு நிலையத்திருக்கும் எனவும், இதுபோன்ற நிகழ்வுகள், கிராமங்கள் தோறும், நடைமுறைப் படுத்தவுள்ளதாகவும், கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது பிரதம அதிதியாக்க கலந்து கொண்டு வெல்லாவெளி பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வே.குணராசசேகரம், கருத்து தெரிவிக்கையில்… இந்து மதமும், விஞ்ஞானமும் எனும் தொணிப் பொருளில் விளக்கங்களை வழங்கியதோடு இதில், கலந்து கொண்ட ஏனைய சமய பிரமுகர்களும் தமது கருத்துக்களைத் வெளியிட்டனர்.

பின்னர், கிழக்கிலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபையின் செயலாளர் வ.சக்கதிவேல் அவர்களினால் எதிர் காலத்தில் மேற்படி சபையினால், மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்கள் பற்றியும், விளக்கமளித்தார்.

IMG_1996 IMG_2002

N5