செய்திகள்

மண்ணில் புதையுண்டு இரத்தினக்கல் அகழ்வு பணியாளர்கள் நால்வர் பலி

இரத்தினப்புரி ஹிலிமலே பகுதியில் இரத்தினக்கல் அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதையுண்டு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 30 , 38 மற்றும் 54 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக இரத்தினப்புரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.