செய்திகள்

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயம்

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் ஹல்பே பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்மேடு ஒன்றை அகற்றிக் கொண்டிருந்த போதே குறித்த மண்சரிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 15 அடி உயரமான மண்மேடு இவ்வாறு சரிந்து விழுந்துள்ளது. சம்பவத்தில் 37 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

காயமடைந்த 6 பேர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

vlcsnap-2015-03-26-13h31m43s39

vlcsnap-2015-03-26-13h32m27s226

vlcsnap-2015-03-26-14h30m29s227

vlcsnap-2015-03-26-14h30m34s23

vlcsnap-2015-03-26-14h31m05s72