செய்திகள்

மதுபானசாலையை மூடுமாறு கூறி சுமார் 5 மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா மாவட்டத்தின் டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம 5ம் பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள மதுபானசாலையை மூடுமாறு கூறி டயகம கிழக்கு தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 500ற்கும் மேற்பட்ட மாணவா்களும், பெற்றோர்களும் பிரதேச மக்களும் இன்று  குறித்த மதுபானசாலைக்கு முன்பாக சுமார் 5 மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

5 வருட காலங்களாக இவ்மதுபானசாலை இயங்குவதாகவும் இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் உழைக்கும் பணம் மதுபானசாலைகே செல்வதாகவும் இதனால் பொருளாதார ரீதியில் இப்பிரதேச மக்கள் பின்தள்ளப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டதிதல் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனா்.

டயகம நகரத்தில் இருந்து 6 கிலோ மீற்றா் தொலைவில் இந்த மதுபானசாலை அமைந்திருப்பது குறிப்பிடதக்கது.

அத்தோடு டயகம நகரத்தில் 2 மதுபானசாலைகள் காணப்படுகின்றது.

தோட்ட தொழிலாளிகளுக்கு சம்பளம், எட்வான்ஸ் வழங்கும் போது அன்றைய நாட்களில் ஆண்கள் அதிகமாக மது அருந்திவிட்டு வீடுகளில் குடும்ப பிரச்சினைகளை ஏற்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் சுட்டிக்காட்டிகின்றனா்.

மதுபானசாலையை உடனடியாக மூடுவதற்கு மலையக அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்குமாறும் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி அவா்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்த ஆர்பாட்டத்தின் மூலம் தாங்கள் தெரிவிப்பதாக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் மேலும் தெரிவித்தனா்.

பாடசாலை மாணவா்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்க விடயமாகும்.

 அதன் பின்னா் டயகம பொலிஸார் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு சென்று மதபானசாலையை மூடுவது தொடர்பிலான இவ்விடயத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறிய கருத்தையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் கலைந்து சென்றனா்.