செய்திகள்

மதுபோதையில் அம்புலன்ஸ் வண்டியை செலுத்திய சாரதி கைது

மதுபோதையில் அம்புலன்ஸ் வண்டியை செலுத்தியதாக கூறப்படும் சாரதியை அட்டன் பொலிஸார் நேற்று  மாலை 3 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.

கொட்டகலை வைத்தியசாலையிலிருந்து 8 நோயாளிகளை ஏற்றிக்கொண்டு நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற அம்புலன்ஸ் வண்டியின் சாரதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் வைத்து இந்த அம்புலன்ஸ் வண்டியை சோதனை செய்தபோது, சாரதி மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. பின் நோயாளர்கள் வேறொரு அம்புலன்ஸ் வண்டியின் மூலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டதுடன் மேற்படி சாரதியை அட்டன் பொலிஸார் கைதுசெய்தனர். சந்தேக நபரான சாரதியை இன்று அட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனா்.