செய்திகள்

மதுபோதையில் மனை­வியை அடித்து துன்­பு­றுத்­திய கண­வனை கடித்துக்குத­றிய வளர்ப்பு நாய்

கண­வரால், மனைவி அடித்து துன்­பு­றுத்­தப்­பட்­டதைப் பார்த்து கொண்­டி­ருந்த வளர்ப்பு நாய் ஒன்று குறித்த நபர் மீது ஆவே­ச­மாகப் பாய்ந்து கடித்து குத­றிய சம்­பவம் ஒன்று கம்­ப­ளையில் இடம்­பெற்­றுள்­ளது.

வளர்ப்பு நாயின் கடிக்கு உள்­ளான நபர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். குறித்த நபரின் உடலில் 35 இடங்­களில் நாய் கடித்­துக்­கு­த­றிய காயங்­க­ளுடன் கீறல் காயங்களும் உள்­ள­தாக வைத்­தி­ய­சாலைத் தக­வல்கள் தெரி­வித்­தன. காயங்­க­ளுக்கு 21 தையல்­களும் இடப்­பட்­டுள்­ளன.

தினமும் மது­போ­தையில் வீட்­டுக்கு வரும் குறித்த நபர் மனைவி, பிள்­ளை­க­ளுடன் சண்­டை­யிடும் சந்­தர்ப்­பங்­க­ளி­லெல்லாம் குறித்த வளர்ப்பு நாய் இடை நடுவே புகுந்து குரைப்­பதும் அந்த நபரை கடிப்­பது போல் பாசாங்கு காட்டி வந்­துள்­ளது.

இந்­நி­லையில் கடந்த சனிக்­கி­ழமை வழ­மைபோல் சண்டை நடந்த சமயம் குறித்த நாய் பல­மாக குரைத்தும் சண்­டையை நிறுத்தாதைய­டுத்து அந்­ந­பரின் மீது ஆவே­ச­மாக பாய்ந்து கடித்துக் குத­றி­யுள்­ளது என்பது குறிப்பிடத்தக்கது.