செய்திகள்

மத்தள விமான நிலையம் விரைவில் மூடப்படும்

அம்பாந்தோட்டையில் மஹிந்த ராஜபக்ஸவினால் அமைக்கப்பட்ட மத்தள விமான நிலையத்துக்கான தனது சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிறுத்தியுள்ள நிலையில் அந்த விமான நிலையம் அனேகமாக மூடப்படலாம் என விமான சேவைகள் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது சேவைகளை நிறுத்தியுள்ள நிலையில் பிளைடுபாய் மற்றும் ரொடான ஆகிய விமான சேவைகளும் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துவதை நிறுத்தும் என்றும் அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் இந்த விமான நிலையம் மொடப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.