செய்திகள்

மத்தியதரை கடக்க முயன்றுபலியாகும் குடியேற்றவாசிகள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்.

2015 இல் மத்தியதரைகடலை கடக்க முயன்று பலியான குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரிக்கலாம் என அதிர்ச்சி தகவலை குடிபெயர்வோரிற்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ளது.
இவ்வருட இறுதிக்குள் 30000 பேரிற்கு மேல் பலியாகலாம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தை விட இது 30 வீதம் அதிகமாக காணப்படும் எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் 3279 பேரே இவ்வாறு மரணித்தனர் ,எனினும் இவ்வருட முடிவில் மத்தியதரை கடலை கடக்க முயன்று பலியாவோரின் எண்ணிக்கை 30000 ற்கும் அதிகமாகலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது.
இவ்வருடம் இதுவரை 1700 பேர் பலியாகியுள்ளனர்என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் கடந்த வருடம் முதல் 4 மாதங்களில் 56 பேரே கடல்விபத்துக்களில் பலியாகியிருந்தனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவளை கடந்தவாரஇறுதியில் கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து உயிர்தப்பியவர்களை சந்தித்து உரையாடியுள்ள ஐ.நா அதிகாரிகள் அந்த விபத்தில் 800 பேர்கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மத்தியதரைகடலில் இடம்பெற்ற மிகவும் மோசமான விபத்து இதுவென தாங்கள் கருதுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.